#ஜம்மு காஷ்மீர் | அத்துமீறி எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லை வழியாக அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள தங்தார் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தங்தார் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பயங்கரவாதியிடமிருந்து 200க்கும் மேற்பட்ட ஏகே ரைபிள் ரவுண்டுகள், 3 மெகசின்கள், இரண்டு சீன ரக கையெறி குண்டுகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் போன்றவையும் மீட்கப்பட்டதாக இந்திய ராணுவத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊடுருவல் முயற்சிகள் குறைந்துவிட்ட போதிலும், இந்தியாவில் பயங்கரவாத செயல்களை பொறிப்பதற்கான எல்லைக்கு அப்பால் இருந்து முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன என்றும், ஊடுருவல் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A terrorist who tried to enter the border was shot dead in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->