ஜெய்ப்பூரில் ரசாயன டேங்கர் மீது லாரி மோதி கொடூர விபத்து - 5 பேர் பலி! - Seithipunal
Seithipunal


ஜெய்ப்பூர், ராஜஸ்தான்: ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை, பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தப்பட்ட எல்பிஜி டேங்கர் மீது லாரி ஒன்று மோதியது. இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ரசாயன ஏற்றியிருந்த டேங்கர் மீது லாரி மோதியதில், அதில் இருந்து தீ பிரிந்தது. தீ அதன் அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கும் பரவி பெரும் தீ விபத்தாக மாறியது.

இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில், பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்ட பல்வேறு வாகனங்களும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீயை அணைக்க கடுமையாக முயற்சித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் போது, பெட்ரோல் பங்கில் இருந்து பெரிய அளவிலான தீப்பிழம்புகள் வெளியேறுவதை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A truck collided with a chemical tanker in Jaipur 5 people died


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->