என் அன்புக்குரிய அறிவார்ந்த வாக்காளர்களே! தலித்,பகுஜன் மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி - அகிலேஷ் யாதவ்!! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் தனக்கு வாக்களித்த அறிவார்ந்த வாக்காளர்களுக்கு நன்றி என சமாஜ்வாஜி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக வெற்றிகரமாக நடத்தி இந்திய தேர்தல் ஆணையம் சாதனை படைத்தது.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது. உத்தரப் பிரதேசத்தில் 62 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாஜி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்று மக்களவை தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சமாசிவாஜி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், என் அன்புக்குரிய அறிவார்ந்த வாக்காளர்களே உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி இந்த வெற்றியானது தலித் பகுஜன் மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்த வெற்றி.

நமது அரசியலமைப்பை காப்பாற்ற அனைவரும் தோளோடு தோல் நின்று போராடி உள்ளனர். அயராத உழைப்பால் அச்சம் மற்றும் நேர்மையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி. நேர்மையான அரசியல் மற்றும் உண்மையான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட மக்களின் வெற்றி. நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் முழு பொறுப்புடன் காப்பாற்றுவோம். வரவிருக்கும் நல்ல தொடக்கத்துக்கு மனமார்ந்த நன்றி மக்கள் வாழ்க என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A victory for Dalit and Bahujan people Akhilesh Yadav


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->