இளம் பெண்ணை உள்ளே செல்ல மறுத்த நைட் கிளப்.! நடுரோட்டில் ஆடை கழட்டிக் கொண்டு போராட்டம்.! - Seithipunal
Seithipunal


நாக்பூர் நகரில் இயங்கி வரும் நைட் கிளப் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டதால் தனது ஆடைகளை கலைத்து உள்ளாடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நாக்பூர் நகரில்  அமைந்துள்ள வாரதா சாலையில் நைட் கிளப் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கிளப்பிற்கு நேற்று வருகை புரிந்த 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு தாமதமாக வந்ததாக கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் அங்கிருந்த காவல்துறையினருடனும் விவாதத்தில் ஈடுபட்டார்.

தன்னை நைட் க்ளப்பிற்குள் அனுமதிக்க வில்லை என்றால் தன்னுடைய ஆடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியவர் பேசிக் கொண்டிருக்கும் போதே தன்னுடைய ஸ்கார்ட்டையும் மேலாடையும் கழற்றி விட்டார். மேலும்  நைட் கிளப் சார்ந்த பவுன்சர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார்.

அந்தப் பெண்ணின் நடவடிக்கைகள் எல்லையில்லாமல் செல்லவே காவல்துறையின் உதவியை நாடியது அந்த நைட் கிளப். இந்நிலையில் காவல்துறையினர் வருவதையறிந்து கொண்ட அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அந்த பெண்மணியை காவல்துறை வலை வீசி தீவிரமாக தேடி வருகிறது. மேலும் அவரது விபரங்கள் எதுவும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a woman threaens to strip of in public for denying permit in a night club


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->