திருமணம் முடிந்தும் காதலை மறக்க முடியாததால் இளம்பெண் காதலனுடன் சேர்ந்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


காதலை மறக்க முடியாததால் காதலனுடன் சேர்ந்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள ஹுருசகுண்டகி பகுதியை சேர்ந்தவர் ஈஷப்பா(22). இவரும் இதே பகுதியை சேர்ந்த சுவர்ணா(20) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது காதலுக்கு சுவர்ணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, சுவர்ணாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதையடுத்து சுவர்ணாவின் கணவர், சுவர்ணாவை அழைத்துக் கொண்டு பெங்களூர் வந்துள்ளார். இருப்பினும் சுவர்ணாவால் தனது காதலை மறக்க முடியாததால், ஈஷாப்பாவுடன் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சுவர்ணா, காதலனை சந்திக்க யாதகிரிக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது, இருவரும் நம்மால் வாழ்வில் ஒன்று சேர முடியாது என்பதால் சாவிலாவது ஒன்று சேர்வோம் என்று அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் இறந்து கிடப்பதை பார்த்த கிராம மக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young girl committed suicide with her boyfriend because she could not forget her love in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->