இனி நாங்களும் தேசிய கட்சி தான்..!! ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ட்விட்..!! - Seithipunal
Seithipunal


குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டு மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற 4 மாநிலங்களில் அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும். அதேபோன்று 2 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று 6% வாக்கு வங்கியை பெற்றிருக்க வேண்டும் என்பது விதிகள்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தற்போதைய குஜராத் அல்லது இமாச்சலப் பிரதேசத்தில் 2 சட்டமன்ற உறுப்பினர்களையும், 6% வாக்குகளும் பெற்றுவிட்டால் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படும். இதன் காரணமாக தேசிய அளவில் அக்கட்சியின் நோக்கம் விரிவடைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்று இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் 12.89% வாக்குகளும் பெற்றுள்ளது. 

இது அடிப்படையில் டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மனிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் "முதன்முறையாக தேசிய அரசியலில் கல்வியும் சுகாதாரமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த தேசத்திற்கு என் வாழ்த்துக்கள். ஆம் ஆத்மி கட்சி இன்று முதல் குஜராத் வாக்கு வங்கியை அடிப்படையாக வைத்து தேசிய கட்சியாக உருவெடுக்கிறது" என பதிவிட்டுள்ளார். தேசிய அரசியலில் ஆம் அருமை கட்சியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aam Aadmi Party has been recognized as national party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->