டெல்லியின் ஒரு பகுதியாக மாறுமா நொய்டா? - கவுதம புத்த நகர் தலைவர் பிரதமர் மோடிக்கு கடிதம்..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம புத்தாநகர் மாவட்டத்தில் உள்ளது நொய்டா நகரம். இந்த நகரம் டெல்லி அருகே இருப்பதால் இதனை டெல்லியின் ஒரு பகுதியாக மாற்ற பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி கட்சியின் கவுதம் புத்த நகர் தலைவர் பூபேந்திர சிங் எழுதிய கடிதம் எழுதியுள்ளார். நொய்டாவை டெல்லியின் ஒரு பகுதியாக மாற்ற வலியுறுத்தியுள்ளார். நொய்டாவை டெல்லியின் பகுதியாக மாற்றும் நடவடிக்கையானது, டெல்லியை போன்று கவுதம புத்தாநகர் மாவட்டத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும் என பூபேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், " அரவிந்த் கெஜ்ரிவால் அரசு டெல்லி மக்களுக்கு மின்சாரம், தண்ணீர், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை இலவசமாக அல்லது குறைந்த விலையில் வழங்குகிறது. இதனால் நொய்டா மக்களுக்கு தண்ணீர், மின்சாரம் மற்றும் பொது போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் இலவசமாக அல்லது குறைந்த விலையில் கிடைக்கும். 

ஆனால் தற்போது நொய்டா உட்பட ஒட்டுமொத்த கெளதம் புத்த நகர் மாவட்டமும் அதை இழந்துள்ளது. டெல்லியைப் போல், ஏழை குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் நல்ல சூழலில் நல்ல கல்வியைப் பெறலாம். பெண்கள் பேருந்தில் இலவச பயணம், முதியவர்கள் இலவசமாக யாத்திரை செல்லலாம்," என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aam admi party write letter prime ministerr


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->