வடகிழக்கு பருவமழை - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆவின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனையொட்டி  நகர்வதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னைக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கையும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னேற்பாடாக 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:- 

”குமரி முதல் சென்னை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஒவ்வொரு மாவட்ட பால் பண்ணையிலும் 4000 அரை கிலோ பால் பவுடர் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 டன் பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

அரை லிட்டர் பால் 50 ஆயிரம் எண்ணிக்கையில் 90 நாட்கள் வரை கெடாமல் இருப்பு வைக்கக்கூடிய வகையில், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி நகராட்சிக்குட்பட்ட ஆவடி, அண்ணாசாலை, தி.நகர் உள்ளிட்ட ஆவின் மண்டல அலுவலகங்களில் தலா 1000 கிலோ வீதம், 9000 கிலோ பால் பவுடர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடை தீவனம் சுமார் 500 டன் மற்றும் தாது உப்பு கலவை சுமார் 50 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aavin announcement for mansoon


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->