மோடியை விமா்சிப்பதால் கிடைத்த வாய்ப்பு: 3 வலையிலும் சிக்கிவில்லை... - நடிகா் பிரகாஷ்ராஜ்! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்ததால் 3 அரசியல் கட்சிகளிடம் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அழைப்பு வந்தது. இருப்பினும் எந்த அரசியல் கட்சி விரித்த வலையிலும் சிக்கவில்லை என பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த பிரபலமான பிரகாஷ் ராஜ் கர்நாடகத்தை பூர்வமாக கொண்டவர். பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து விமர்சித்ததன் மூலம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூருக்கு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் நேற்று கோழிக்கோட்டில் நிறைவடைந்த கேரள இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்டார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, எனக்கு தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி மீது எந்த ஒரு வெறுப்பும் கிடையாது. உரிய முறையில் வரி செலுத்தி வருகிறேன் என்ற முறையில் மோடி உள்பட அரசு துறையில் உள்ள அனைவருக்கும் எனது பணம் ஊதியமாக செல்கிறது. 

அவர்கள் மக்களாகிய நம்மை வேலைக்காரர்கள் போல் நடத்துவதை ஏற்க முடியாது. மக்களுக்கான வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று விமர்சிக்கிறேன். இது எனது கருத்து மட்டுமல்லாமல் மக்கள் அனைவரின் கருத்தாக நினைக்கிறேன். 

கேள்வி கேட்பவர்கள் இருந்தால் அதிகாரத்தில் இருப்பவர்கள் முறையாக செயல்படுவார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் 3 கட்சிகள் தங்களது கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என என்னை அணுகின. 

மோடியை விமர்சிக்கிறேன் என்பதால் 3 கட்சியினரும் என்னை தொடர்பு கொண்டார்கள். மோடியை தொடர்ந்து விமர்சிப்பதால் அவர்களுக்கு நான் சிறந்து வேட்பாளராக இருக்கிறேன் என தெரிவித்தனர். 

ஆனால் அவர்கள் விரித்த வலையில் நான் சிக்கவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் நேர்மையையும் கொள்கையையும் இழந்துவிட்டதால் நல்ல வேட்பாளர்கள் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Prakash raj criticizing Modi 3 parties received


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->