அதானி ஹிண்டன்பர்க் வழக்கு: 3 மாதம் தான்... உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபியே விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த ஒரு அடிப்படையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான ஹிண்டன்பர்க்  ஆய்வு அறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. 

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்த மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என மனுக்கள் தொடரப்பட்டது. 

இதன் மீதான தீர்ப்பு தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். அதில், செபியின் ஒழுங்குமுறை சட்டத்திற்குள் நுழைவதற்கு நீதிமன்ற வரம்புக்குட்பட்டதாகவும் செபிகே உத்தரவிட்ட சரியான காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விசாரணையை செபி 3 மாதத்திற்குள் முடித்து அறிக்கை சமர்ப்பித்தால் இந்த வழக்கு வேறு எந்த விசாரணை அமைப்பிற்கும் மாற்ற அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பந்தப்படாத நிறுவனத்தின் அறிக்கையை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. விசாரணையில் செபி வசம் இருந்து புலனாய்வு குழு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அறிக்கையில், அதானி குழுமம் பல மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. பங்கு மதிப்பில் உயர்வு காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றதாகவும் பங்குச்சந்தையில் முறை கேட்டில் ஈடுபட்டதாகவும் அதன் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி வரி எய்ப்பு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள், மத்திய அரசு மற்றும் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adani Hindenburg case Supreme Court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->