ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் மொத்தம் 61 கோடி பேர் வருமான வரி பான் கார்டு வைத்துள்ளனர். இதில், இதுவரை 48 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்னும் 13 கோடி பேர் இணைக்க வேண்டும்.

மேலும், இணைக்க தவறுபவர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பான் எண்ணும் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க கால அவகாசம் வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adhar card and PAN card link period extend to June


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->