மீண்டும் தீ விபத்து - மகா கும்பமேளாவில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. அடுத்த மாதம் 26-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கும்பமேளாவை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்தக் கும்ப மேளாவில் பங்கேற்க வந்துள்ள பக்தர்களுக்காக  மகாகும்ப நகரின் செக்டார் 19 பகுதியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 18 கூடாரங்கள் எரிந்து சேதமானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலை மகா கும்பமேளா செல்லும் பிரதான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்களில் தீ பரவியதால், அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:- "கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் தொலைதூர பகுதிகளில் இருந்து வந்து, தங்கள் வாகனங்களை இங்கு நிறுத்தி வைத்துள்ளனர். வாகனத்தின் என்ஜின் சூடானதால் தீ விபத்து ஏற்பட்டது.

காலை 6.30 மணிக்கு காரில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனே 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again fire accident in prayagraj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->