மதுபோதையால் நடந்த கொடூர விபத்து: 4 பேர் பலி, 3பேர் படுகாயம்!
Telangana lorry auto accident
தெலங்கானா மாநிலம், வரங்கல் மாவட்டத்தில் நடந்த லாரி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், மூன்று பேர் படுகாயமடைந்தனர். வரங்கல்-கம்மம் நெடுஞ்சாலையில் இன்று இரும்பு கம்பிகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
லாரியில் இருந்த இரும்பு கம்பிகள், அவ்வழியாகச் சென்ற கார் மற்றும் ஆட்டோ ரிக்ஷா மீது விழுந்ததில் இந்த விபத்து நேரிட்டது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலைச் சேர்ந்த சந்தோஷ், பூஜா, கிரண் மற்றும் முகேஷ் ஆவர். காயமடைந்தவர்கள் வரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மம்னூர் ஏசிபி பி. திருப்பதி, காவல் ஆய்வாளர் ஓ. ரமேஷ் மற்றும் போலீசார், நெடுஞ்சாலையில் கிடந்த இரும்பு கம்பிகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மது போதையில் ஓட்டுநர் அதிவேகமாக லாரியை ஓட்டியதே விபத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Telangana lorry auto accident