அக்னிபாத் : இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி.? - Seithipunal
Seithipunal


இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் 'அக்னிபாத்' என்ற திட்டம் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதும் 'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது.

அதேபோல் தற்போது விமானப்படைக்கும் ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்திய விமானப்படையில் அக்னி வீரர்களாக சேர ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

ஜூன் 27, 2003 - டிசம்பர் 27, 2006க்கு இடையே பிறந்த திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாடத்துடன் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், டெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகிய ஏதாவது ஒரு டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

கடந்த ஜூலை 27ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு, ஆகஸ்ட் 17ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agnipath Indian Navy employment opportunities


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->