பிரயாக்ராஜ் மகா கும்பத்தில் AI மூலம் பாதுகாப்பு !! - Seithipunal
Seithipunal


வருகின்ற 2025 ஆம் ஆண்டு உத்தர் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறவுள்ள மஹா கும்பத்தில் திருட்டு மற்றும் மற்ற குற்ற சம்பவங்களை தவிர்க்க ஒரு புதுவித பாதுகாப்பு வழி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மகா கும்பம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அந்த கும்ப விழாவில் ஒவ்வொரு அடியிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் யாராவது திருட முயன்றால் உடனே பிடிபடுவார். இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகா கும்பம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்புக் கூட்டத்தை கூட்டினார்.

இந்த கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டன. மேலும், இந்த மகா கும்பம் உலகளாவிய வர்த்தகத்தின் மகா கும்பமாக மாறும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உலகம் முழுவதிலும் உள்ள இந்து மக்கள் இந்த கும்பத்தில் கலந்து கொள்ள உற்சாகமாக உள்ளனர். மேலும், இந்த மகா கும்பத்தில் கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இக்கூட்டத்தில் உயர் அதிகாரிகளுக்கு பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன. 

உத்தர் பிரதேச மகா கும்பத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பைப் மேம்படுத்தவும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முதல்வர் வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார். மேலும், மகா கும்பத்தில் கண்காணிப்பு கேமராக்கள், கால் சென்டர், தொலைந்து போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட மையம் போன்ற அமைப்புகளை அமைக்க வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டன.

பிரயாக்ராஜில் வருகின்ற 2025 ஜனவரி 13 முதல் தொடங்க உள்ள மகா கும்பம், பிப்ரவரி 26, 2025 வரை நடைபெறும். மேலும் மகா கும்பமேளாவின் பரப்பளவு 4000 ஹெக்டேருக்கு மேல் இருக்கும். இந்த விழாவில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான கழிவறைகள் மற்றும் 10 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பௌஷ் பூர்ணிமா, மகர சங்கராந்தி, மௌனி அமாவாசை, பசந்த பஞ்சமி, மக பூர்ணிமா, மகாசிவராத்திரி போன்ற நாட்களில் 45 நாட்களுக்குள் ராஜ ஸ்நானம் நடைபெறும். மேலும் அங்கு செல்வதற்கு போக்குவரத்து துறை மூலம் 7000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விழாவிற்காக அக்டோபர் மாதத்திற்குள் விமான நிலையம் மற்றும் புதிய முனையப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பத்துடன், மகா கும்பத்தின் போது முழு ஏழு நாட்களும் 24 மணி நேரமும் காவல்துறை ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ai technology going to be used in prayagraj maha kumbha mela


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->