17 ஆண்டுகளுக்குப் பிறகு 840 விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கும் ஏர் இந்தியா.! - Seithipunal
Seithipunal


ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விலைக்கு வாங்கியது. இந்த நிலையில்,  டாடா குழுமம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விரிவுபடுத்தும் வகையில், 840 விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. 

அதன் படி இந்த விமானங்களை அமெரிக்காவை சேர்ந்த ஏர்பஸ், போயிங் ஆகிய விமான நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதற்கு 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால் தெரிவித்ததாவது:- 

புதிதாக வாங்க இருக்கும் 840 விமானங்களில், 250 விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்தும், 220 விமானங்கள் போயிங் நிறுவனத்திடம் இருந்தும், மீதி உள்ள 370 விமானங்களை கொள்முதல் உரிமத்துடனும் வாங்க உள்ளோம். 

இதில், முதலாவது ஏ350 ரக விமானம் மட்டும் எங்களிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்படைக்கப்படும். மற்ற அனைத்து விமானங்களும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வந்து சேர்ந்து விடும். ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு 111 விமானங்களை வாங்குவதற்கு 'ஆர்டர்' கொடுத்தது. 

அதைத் தொடர்ந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தற்போது தான் ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை கொள்முதல் செய்கிறது. இந்த கொள்முதல் இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இது மைல்கல்லாக அமையும். 

ஏர் இந்தியா நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாற்றுவதற்காகவும், உலகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடைவிடாமல் விமான சேவையை அளிப்பதற்காகவும் புதிதாக விமானங்களை வாங்குகிறோம். 

இது மட்டுமல்லாமல், விமான என்ஜின்களை நீண்ட காலம் பராமரிப்பதற்காக சி.எப்.எம்.இன்டர்நேஷனல், ரோல்ஸ்ராய்ஸ், ஜிஈ ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india company order 840 flights buy at first time


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->