பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவத்தில் இரண்டாவது முறை அபராதம் செலுத்தும் ஏர் இந்தியா.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் மது போதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட விமான போக்குவரத்து இயக்குனரகம், சம்பவம் குறித்து தகவல் கொடுக்காமல், பெண் பயணி மீது ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தை சரியாக கையாளாத ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் அபாராதம் விதித்தது. 

இந்த சம்பவம் முடிவதற்குள் அதே ஏர் இந்தியா விமானத்தில் அதேபோன்று பயணி ஒருவர் இருக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் குறித்தும் ஏர் இந்தியா விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு தகவல் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

ஏற்கனவே முதல் சம்பவத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது சம்பவத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india company ten lakhs fined for passanger urinated case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->