அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் - நடந்தது என்ன?

நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சார்ஜாவுக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பயணி ஒருவர் விமான ஊழியரிடம் ஏதோ தீயில் கருகுவது போன்ற வாசனை வருவதாக தெரிவித்தார்.

இதைக்கேட்ட அவர் விமானியிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விமாணி விமானத்தை மீண்டும் கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அவாரமாக தரையிறக்கினார்.

அதன் பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடபட்டனர். இதைதொடர்ந்து ஊழியர்கள் விமானத்தில் சோதனை செய்தனர். அப்போது விமானத்திற்குள் தீ பற்றியதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

இருப்பினும் ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து பயணிகளுடன் புறப்பட்டது. இந்த சம்பவத்தால் பயணிகள் சற்று காலதாமதமாக சார்ஜாவுக்குச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air india flight emergency landing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->