சவூதிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.! திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்.!
air india flight emergency landing in thiruvanathapuram airport
கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவுக்கு நேற்று காலை ஏா் இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானம், ஓடுதளத்திலிருந்து எழும்பி மேலே பறக்கத் ஆரம்பித்த போது, விமானத்தின் பின்பகுதி ஓடுதளத்தில் உராய்ந்து சேதம் ஏற்பட்டதாக விமானிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, விமானத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, இது தொடர்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டன. மேலும், விமான நிலையத்தின் அவசரகால வழிகளும் திறந்த நிலையில் வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, விமானம் திட்டமிட்ட நேரத்தில் எந்த அசாம்பவிதமும் இல்லாமல் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பின்னர் விமானத்தில் பயணித்த நூறுக்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் அனைவரும் சவூதி செல்வதற்கான மாற்று விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது. இந்தச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள விமானப் போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
air india flight emergency landing in thiruvanathapuram airport