மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அகிலேஷ் யாதவ்..!
Akhilesh Yadav takes a holy dip in the Triveni Sangam
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற்ற உள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து வந்து இந்துக்கள் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் இன்று மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்று, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் கூறுகையில்,
"பாரம்பரிய முறைப்படி திரிவேணி சங்கமத்தில் 11 முறை மூழ்கி புனித நீராடும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது.
இந்த மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. சகிப்புத்தன்மையுடனும், நல்லிணக்கத்துடனும் நாம் அனைவரும் முன்னேறி செல்ல வேண்டுமென கடவுளிடம் நாம் பிராத்திக்கிறோம். மக்கள் நலனுக்காக நாங்கள் உறுதிமொழி எடுக்கிறோம்' என்று கூறியுள்ளார்.
https://x.com/ANI/status/1883461259594780686?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1883461259594780686%7Ctwgr%5Ef362cb2fc048e03997a88b4d618c272b4b72421d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Findia%2Fmaha-kumbh-2025-akhilesh-yadav-takes-holy-dip-at-sangam-says-there-is-no-difference-between-the-yamuna-in-delhi-and-up-both-are-in-bad-condition-12919745.html
English Summary
Akhilesh Yadav takes a holy dip in the Triveni Sangam