2 வயது குழந்தையின் உயிரை பறித்த கேரட் - சென்னையில் பரிதாபம்.!
2 years old girl died for carrot stuck in throat at chennai
சென்னையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை, தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் – பிரமிளா தம்பதியினர். இவர்களுடைய மகள் லித்திஷா. இவரை அவரது தாய் பிரமிளா கொருக்குப்பேட்டையில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு விளையாடிக்கொண்டு இருந்த லித்திஷா, கேரட் துண்டை எடுத்து சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கேரட், தொண்டையில் சிக்கியதால் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்து பதறிப்போன உறவினர்கள், குழந்தையை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கேரட் துண்டு, தொண்டையில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை உயிரிழந்த தகவலறிந்ததும், போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 years old girl died for carrot stuck in throat at chennai