ராமர் கோயிலை இடித்து மீண்டும் பாபர் மசூதி எழுப்புவோம்... அல்கொய்தா பெயரில் மிரட்டல்..!!
Al Qaeda threatened demolish Ram Temple and rebuild Babri Masjid
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் நடத்திய பிறகு ஆப்கானிஸ்தானில் மலைக்குன்றுகளில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்கத்தினரை அமெரிக்க ராணுவம் கொன்று குவித்தது. அதேபோன்று பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்கொய்தா அமைப்பின் எஞ்சிய தளபதிகளும் வேட்டையாடப்பட்டனர். ஒரு சில தங்களின் அடையாளத்தை மாற்றிக் கொண்டு ஐஎஸ் அமைப்பிலும் பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளிலும் தஞ்சம் அடைந்தனர்.
அதன் பிறகு அல்கொய்தா அமைப்பு தொடர்பான எந்தவித செய்திகளும் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான ஊடக தலையங்கத்தில் ராமர் கோயில் தொடர்பான மிரட்டல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் "பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருவது போலவே மீண்டும் அந்த இடத்தில் பாபர் மசூதியை எழுப்பதற்காக ராமர் கோயில் தகர்க்கப்படும். இதற்கான ஜிகாத் போரில் இந்திய முஸ்லிம்களும் பங்கேற்க வேண்டும்.
தங்களின் பங்களிப்பை உழைப்பாகவோ பொருளாகவோ தர வேண்டும்" என்ற வாக்கியத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத் மற்றும் பிரதமர் மோடிக்கான மிரட்டல்களுடன் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. ராமர் கோயில் காண பணிகள் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்து வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் அறிவித்திருந்த நிலையில் இத்தகைய மிரட்டல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Al Qaeda threatened demolish Ram Temple and rebuild Babri Masjid