சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி.. தொல்லியல் ஆய்வுக்கு அனுமதி.. அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் மாநிலம் ஞானவாபியில் அமைந்துள்ள மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஞானவாபி மசூதிக்குள் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவலிங்கம் இருந்ததாக கூறப்படும் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் மசூதி கட்டுமானத்தை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற விசாரணை முடிவில் உத்தர பிரதேச மாநிலம் ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா என்பது குறித்து இந்திய தொல்பொருள் துறை மூலம் ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வின் பொழுது ஞானவாபி மசூதி கட்டிடத்திற்கு எந்த விதமான சேதாரமும் ஏற்படக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் கார்பன் டேட்டிங் கோரி இந்து தரப்பு தாக்கல் செய்த இந்த மனுவின் மீது அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்டர் அடங்கிய அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Allahabad court allows inspection of Gnanavadi mosque


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->