பீகாருக்கு ரூ.26 கோடி..ஆந்திரவிற்கு ரூ.15 கோடி சிறப்பு நிதி! அடித்து ஆடுவாரா நாயுடு! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்துக்கு ரூ.26 கோடி நிதியும் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.15 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியது. பாஜக தனித்து 240 இடங்களை கைப்பற்றியது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பாஜகவால் முடியாததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடி ஆட்சியை தக்க வைத்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு தெலுங்கு தேசம் கட்சியும் ஐக்கிய ஜனதா தளமும் ஆதரவு தெரிவித்தனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும்  வென்றது. பாஜக ஆட்சி அமைப்பதற்கு நிதீஷ் குமாரும் சந்திரபாபு நாயுடு  பக்க பலமாக இருந்தனர்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவும்  நிதிஷ்குமாரும் மாறி மாறி டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்து தங்கள் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்க  வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

அந்த வகையில் மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.15 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பீகாரில்  புதிய சாலைகள் அமைப்பதற்கு உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இதனை கேட்ட எதிர்க்கட்சிகள் ஆந்திரா பீகாருக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Allocation of Rs 26 crores for Bihar and Rs 15 crores for Andhra State


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->