இந்திய விமான படையின் புதிய தளபதியாகிறார் அமர் பிரீத் சிங் - மத்திய அரசு!
Amar Preet Singh will be the new commander of the Indian Air Force Central Government
இந்திய விமான படையின் தலைவராக வி.ஆர். சவுத்ரி பதவி வகித்து வரும் நிலையில், வரும் 30-ம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெறுகிறார். இதன் காரணமாக அந்த பதவிக்கு, பணிமூப்பு கொள்கையின்படி, ஏர் மார்ஷலாக பதவி வகித்து வரும் அமர் பிரீத் சிங்கை அரசு தேர்வு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், 4 தசாப்தங்களாக பணியில் உள்ள சிங், தளபதி, பணியாளர், அறிவுறுத்தல் மற்றும் வெளிநாட்டு நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு அந்தஸ்திலான முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் வாய்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் பல்வேறு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணிநேரம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சிங்.
அதுமட்டுமல்லாமல், ரஷியாவின் மாஸ்கோ நகரில், மிக்-29 போர் விமான மேம்பாட்டு திட்ட மேலாண்மை குழுவை வழிநடத்தி சென்றிருக்கிறார் என்றும், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட தேஜஸ் இலகுரக விமானத்தின் திட்ட இயக்குநராகவும் இருந்திருக்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Amar Preet Singh will be the new commander of the Indian Air Force Central Government