அமர்நாத் யாத்திரையில் தொடரும் சோகம்! அதிர வைக்கும் பேர் பலி எண்ணிக்கை! - Seithipunal
Seithipunal


அமர்நாத் பயணிகள் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். அதை அடுத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது:

ஜூலை 1-ம் தொடங்கிய அமர்நாத் புனித யாத்திரை தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெற்று, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், பஹல்காம் வழித்தடத்தில் பயணித்த மூவர் மற்றும் பால்டால் வழித்தடத்தில் பயணித்த இருவர் உள்பட மொத்தம் 5 பேர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் உத்தரப் பிரதேசத்தையும், ஒருவர் மத்தியப் பிரதேசத்தையும் சேர்ந்தவர் என தெரிய வந்தது. மேலும் ஒருவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 

கடந்த 24 மணிநேரத்தில் நடந்த ஐந்து இறப்புகளோடு, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கி 19 பேர் பலியானவர்களது எண்ணிக்கை உயர்ந்துள்ளன. அதில் இந்திய-திபெத் பாதுகாப்புப் படை அதிகாரியும் அடங்குவர். 

இந்த யாத்திரையில் அதிக உயரம் காரணமாக ஆக்ஸிஜன் செறிவு குறைவதால் மாரடைப்பு போன்ற இயற்கை மரணங்கள் நிகழ்கிறது. இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஒன்றாகவே உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amarnath 5 passengers died increased death 19


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->