நட்பாக பேசி அமெரிக்க பெண் பாலியல் பலாத்காரம்.. 2 கேரள இளைஞர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது பெண் ஒருவரை கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் அருகில் அமைந்துள்ள கருணாகப்பள்ளி பகுதியில் ஆசிரமம் ஒன்று இருக்கின்றது. அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் அந்த ஆசிரமத்திற்கு வந்துள்ளார். ஆசிரமத்திற்கு அருகில் இருக்கும் கடற்கரையில் அந்த பெண் தனியாக இருந்தபோது இரு வாலிபர்கள் அவரிடம் நட்பாக பேசியிருக்கின்றனர்.

அதன் பின் அந்த பெண்ணை நைசாக பேசி அங்கிருந்து தனியாக அழைத்துச் சென்று அவருக்கு மதுபானம் கொடுத்துள்ளனர். போதை அதிகமானதால் மயக்க நிலைக்கு அந்த பெண் சென்ற நிலையில், அவரை தங்களது  பைக்கில் வைத்து ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று இரண்டு வாலிபர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

அவரது மயக்கம் தெளிந்த பின் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிந்து பெண் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த குற்ற செயலில் ஈடுபட்ட செரியழிக்கல் பகுதியை சேர்ந்த நிகில் (28) மற்றும் ஜெயன் ( வயது 24) 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American women raped in Kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->