2024ல் மீண்டும் மோடி ஆட்சி... நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு... அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு...!!!
Amit Shah announced extended BJP national president Natta post
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்தியா முழுவதும் 9 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தொடர்ச்சியாக நடைபெறும் 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அதனை தொடர்ந்து நடைபெறும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு பாஜக தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று டெல்லியில் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த 12 மாநிலங்களின் முதலமைச்சர்கள், 35 மத்திய அமைச்சர்கள், 37 மாநிலங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடிக்கு பிரம்மாண்டமான உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய தமிழக பாஜகவின் தேசிய தலைவர் நாட்டா 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமே எதிர்வரும் 9 மாநில சட்டப்பேரவை தேர்தல். எனவே 9 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக அகில இந்திய தலைவராக ஜே.பி நாட்டாவின் பதவிக்காலம் வரும் 2024ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என நம்பிக்கை உடன் தெரிவித்துள்ளார்.
English Summary
Amit Shah announced extended BJP national president Natta post