தேர்தல் முடியட்டும்... காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து... உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி..!! - Seithipunal
Seithipunal


காஷ்மீரில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தும் முடிவை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது "திரிபுரா மட்டுமல்லாமல் அடுத்து நடைபெற உள்ள கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றும்.

காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து உள்ளது. தேர்தல் நடத்துவது குறித்தான முடிவை தேர்தல் ஆணையம் தான் எடுக்க வேண்டும்.

காஷ்மீரில் நாடாளுமன்ற தேர்தல் முதல் பஞ்சாயத்துக்கள் வரை அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதற்கு தற்பொழுது தான் சரியான நேரம். மக்களவையில் இதுவரை பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தை யாருக்கும் மக்கள் வழங்கவில்லை. எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்" என்று அமித் ஷா பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah said that statehood will be given to Kashmir after elections


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->