திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்யவுள்ள அமித்ஷா ! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று தமிழகத்திற்கு வந்துள்ளார். வாரணாசியில் இருந்து தனி விமான மூலம் திருச்சிக்கு வந்த அமித் ஷா அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

தமிழக பயணத்தை முடித்துவிட்டு திருப்பதிக்கு செல்லும் நாளை காலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். இவரது வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழித்தடங்கள், விருந்தினர் மாளிகை, ஏழுமலையான் கோவில் வளாகம் உள்ளிட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் பக்தர்களின் உடைகளை சோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதி செய்யப்படும். சாதாரண உடை அணிந்த போலீசார் பக்தர்கள் கூடும் அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit shah sami darshan tirupathi temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->