பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க மசோதா - அமித்ஷா தகவல் - Seithipunal
Seithipunal


பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தரவுகளை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் தலைமை பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைத்த பின் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,

டிஜிட்டல் முழுமையான மற்றும் துல்லியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் பல பரிமாண பலன்களைக் கொண்டிருக்கும். இது மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் திட்டமிடல், மேம்பாட்டு திட்டங்கள் ஏழை எளிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்கிறது என்றார்.

மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டால், வளர்ச்சிப் பணிகளை முறையாகத் திட்டமிட முடியும். இறப்பு மற்றும் பிறப்பு பதிவேட்டை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். 

இந்த நடைமுறையின் கீழ், ஒருவருக்கு 18 வயது நிறைவடையும் போது, ​​அவரது பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். அதேபோல், ஒருவர் இறந்தால், அந்த தகவல் தானாகவே தேர்தல் கமிஷனுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கும் பணியை தேர்தல் கமிஷன் செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah says will be announce bill to link birth death data with electoral rolls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->