திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.! - Seithipunal
Seithipunal


மத்திய மந்திரி அமித் ஷா மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்று மாலை விமானம் மூலம் ரேணிகுண்டா வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக திருப்பதி மலைக்கு சென்றனர். 

அங்கு அமித்ஷாவிற்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அமித்ஷா மற்றும் அவரது மனைவி நேற்றிரவு தங்கினர். 

இந்நிலையில் இன்று காலை மற்றும் அவரது மனைவி விஐபி பிரேக் தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரம் மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். 

இதனை தொடர்ந்து இன்று மதியம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வரும் அமித் ஷா விமான மூலம் டெல்லி புறப்பட உள்ளார். 

அமித் ஷா வருகையை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருப்பதி மலை பாதையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitsha Sami Darshan Tirupathi Temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->