ஆந்திர மாநிலம்.! அம்மோனியா வாயுக்கசிவினால் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி, கண் எரிச்சல்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் அமோனியா வாயுக் கசிவினால் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்திலுள்ள அச்சுதாபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட போரஸ் ரசாயன ஆய்வகம் அமைந்துள்ளது.

இதன் அருகே பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா என்ற நிறுவனமும், இந்த நிறுவனத்தின் வளாகத்திலே சீட்ஸ் அப்பேரல் இந்தியா என்ற மற்றொரு நிறுவனமும் அமைந்துள்ளது. இதில் சுமார் 1,800 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் போரஸ் ஆய்வகத்தில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு, அருகிலுள்ள நிறுவனத்திற்கும் பரவியுள்ளது. இதில், சீட்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணியில் இருந்த 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அச்சுதாபுரம் பகுதியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அழைத்து செல்லப்பட்ட நிலையில், மற்ற பணியாளர்களை தொழிற்சாலையிலிருந்து உடனே வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தொழிலாளர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க அதிகாரிகளிடம் தெரிவித்ததோடு, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ammonia gas leak in a company in the state of Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->