#BREAKING | காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதிவியை ராஜினாமா செய்த தலைவர்! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.

அதன் தொடர்ச்சியாக ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா தனது கட்சியை ஜனவரி 4ம் தேதி காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்போவதாக தகவல்கள் கசிந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒய்.எஸ்.ஷர்மிளா தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். 

மேலும், ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அப்போதே அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டன.

இந்த நிலையில், ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கிடுகு ருத்ர ராஜு ராஜினாமா செய்து உள்ளார்.

இதன் மூலம்  ஆந்திர காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra Pradesh Congress head resign new head may be YSSharmila


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->