திருப்பதி லட்டு விவகாரம்! முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் வீடு மீது தாக்குதல்! - Seithipunal
Seithipunal


திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டில் மாட்டு இறைச்சியின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தான் இந்த தவறு அரங்கேறியதாக, தற்போதைய முதல்வர் சந்திரபாபு குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த குற்றச்சாட்டுக்கு ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்து, அரசியல் ரீதியான குற்றச்சாட்டு என்றும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பாஜகவை சேர்ந்த சிலர் குண்டூரில் உள்ள ஜெகன்மோகன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஜெகன்மோகன் வீட்டின் மீது கற்களை வீசி திடீர் தாக்குதலில் பாஜகவினர் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினரின் இந்த தாக்குதலில் ஜகன்மோகன் ரெட்டியின் பாதுகாவலர் அறையின் கண்ணாடி உடைந்தது மட்டுமல்லாமல், வீட்டின் சுவர்கள் காவி சாயம் பூசப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

இதற்கிடையே, திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra pradesh Tirupati Laddu Controversy Jagan Mohan home attacked BJP


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->