சென்னை காவல்துறை ஆணையர் அருணின் பெயரிலேயே சைபர் க்ரைம் மோசடி முயற்சி! - Seithipunal
Seithipunal


சென்னை காவல்துறை ஆணையர் அருணின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் க்ரைம் மோசடி முயற்சி நடந்துள்ளது.

+92 எனத் தொடங்கும் செல்போன் எண்ணின் வாட்ஸ் அப் DP-ல் சென்னை காவல்துறை ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்பட ஆதாரத்துடன் ஒருவர் X தளத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறையின் X பக்கத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.


சென்னை பெருநகர காவல்துறையின் செய்திக்குறிப்பு:

வேப்பேரி காவல் நிலையம்: அருவாளுடன் சுற்றித்திரிந்த நபர் கைது. அருவாள் பறிமுதல்.

ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம்: முன்விரோதம் காரணமாக பெண்ணிடம் தகராறு செய்து, அவரது குடும்பத்தினரை இரும்பு ராடால் தாக்கிய நபர் கைது.

புழல் காவல் நிலையம்: பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 2 நபர்கள் கைது.

பெரியமேடு காவல் நிலையம்: சென்டிரல் இரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநரை கட்டையால் தாக்கிய 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police ARUN Cyber Crime


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->