பெரும் அதிர்ச்சி! பிரியாணி, சமோசா சாப்பிட்ட 3 மாணவிகள் பலி! 86 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Andhra Pradesh School Student Death in food poison
ஆந்திர மாநிலத்தில் கெட்டுப்போன பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அனகாபள்ளி மாவட்டம், கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதியில் இன்று கெட்டுப் போன பிரியாணி மற்றும் சமோசாவை உண்ட 3 மாணவர்கள் பலியாகி உள்ளனர்.
30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு மாணவிகள், ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அந்த விடுதியில் தங்கி இருந்த 86 மாணவ மாணவிகளும் கெட்டுப்போன இந்த உணவை உட்கொண்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விடுதி சட்ட விரோதமாக செயல்பட்ட விடுதி என்றும், இந்த விடுதியை நடத்தி வந்த கிருஷ்ணா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த விடுதிக்கு உண்டான அறக்கட்டளை நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிய வேண்டும் என்று போலீசார் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற மாணவ மாணவியர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க மாநில அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த மாணவன், மாணவிகளின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Andhra Pradesh School Student Death in food poison