தொடரும் குழப்பம்... தலைநகரமாகுமா திருப்பதி? - முன்னாள் மத்திய மந்திரி பேச்சு! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம், தெலுங்கானா-ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்ட போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திராவின் தலைநகரமாக வைத்தார். 

இதனை அடுத்து ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்கள் என அறிவித்துள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் முடிவாகாத நிலையில் காங்கிரஸ் முன்னால் மந்திரி சித்தா மோகன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். 

அதில், சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதி தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. பிறகு ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி 3  தலைநகரங்களை அறிவித்தார். இதனால் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளார். 

ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு தவறிவிட்டது. இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தி திருப்பதி தலைநகரமாக மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra State tirupathi capital issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->