65 கிலோ மீட்டர் நடந்தே வந்த கர்ப்பிணி பெண்., ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை.! மது படுத்தும் பாடு.! - Seithipunal
Seithipunal


கணவன் குடித்துவிட்டு தகராறு செய்ததால், கர்ப்பிணி மனைவி கோபித்துக்கொண்டு கையில் காசு இல்லாமல் தாய் வீட்டுக்கு சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்துள்ள துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் : கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷினி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு, இருவரும் தற்போது திருப்பதி அருகே வீடு எடுத்து தங்கி, கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், வர்ஷினியின் கணவர் தினமும் குடித்துவிட்டு அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வர்ஷினி சம்பவம் நடந்த அன்று இரவு, கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தாய் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். அதற்காக கணவனிடம் பேருந்து செலவுக்கு பணம் கேட்டுள்ளார்.

ஆனால் கணவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கவே, இதனால் விரக்தியடைந்த வர்ஷினி, ரேணிகுண்டா காலகஸ்தி வழியாக நாயுடு பேட்டை பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார்.

சுமார் 65 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த அவருக்கு, பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்துவதற்கு கை மூலம் சைகை காண்பித்துள்ளார். ஆனால் கர்ப்பிணிப்பெண் என்று தெரிந்தும் எந்த வாகனங்களும் நிறுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு சிறிது காலதாமதம் ஆகிவிட்டது. 

அதற்குள் வயிற்றிலிருந்து குழந்தை பாதி தூரம் வெளிவந்துள்ளது. பின்னர் ஆம்புலன்ஸ் வரவே, அவரை மீட்டு ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது அவருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு வர்ஷினியும், அவரது ஆண் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயத்தில் வர்ஷினியின் கணவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கு நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andra pregnant lady walk in 65km


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->