அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை - Seithipunal
Seithipunal


யெஸ் வங்கி அதிபர் ராணா கபூருக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

மேலும் சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.814 கோடி வைத்து ரூ.420 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக நேற்று அனில் அம்பானி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் அம்பானியிடம் சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி இன்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ், அனில் அம்பானியின் நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு அதிகார வரம்புகளில் வெளியிடப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு குறித்து டினா அம்பானியிடம் விசாரிக்கப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anil Ambanis wife Tina Ambani is being investigated by the Enforcement Directorate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->