இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம்.!! - Seithipunal
Seithipunal


ஹரியானாவை சேர்ந்த ஐ சி ஏ ஆர் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விலங்குகளுக்கு செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தற்போது விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விலங்குகளுக்காக இந்திய தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்துவைத்தார். இந்த தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்றும் மத்திய விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அனோகோவாக்ஸால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, விலங்குகளை தாக்கும் டெல்டா மற்றும் ஓமைக்ரான் வைரஸ்களை கட்டு படுத்துகிறது என்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. விஞ்ஞானிகள் பபங்களிப்புகளால் இறக்குமதி செய்வதை விட சொந்த தடுப்பூசியை உருவாக்குவதில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது. இது உண்மையில் ஒரு பெரிய சாதனை என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Animals Corona Vaccine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->