நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதை தவிருங்க.. மத்திய அமைச்சரிடம் அண்ணாமலை வலியுறுத்தல்..!!
Annamalai ask abandon coal mine in Delta district
தமிழகத்தில் தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுவரங்கம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கள் அமைப்பதற்கான சோதனை மேற்கொள்ள ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.
அதற்கான ஒப்பந்தத்தை சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று தமிழக சட்டப்பேரவையில் பல கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தன. அதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நானும் டெல்டா காரன் தான் எந்த வகையிலும் நிலக்கரி சொந்தங்கள் விவசாய நிலத்தில் அமைய விடமாட்டேன் என உறுதி அளித்தார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிலக்கரி மற்றும் சுருங்கத் துறை அமைச்சர் ஜோஷி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழங்கியுள்ள கோரிக்கை கடிதத்தில் "மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் மூலம் கடந்த மார்ச் 29ஆம் தேதி கிழக்கு சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக அரசு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளது.
டெல்டா பகுதிகளான கிழக்கு சேத்தியாத்தோப்பு, மைக்கேல் பட்டி மற்றும் வடசேரியில் நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள மத்திய நிலக்கரி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நிலக்கரி சுரங்கம் விரிவாக்க பணிகள் மேற்கொண்டால் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகும் எனவே மேற்கண்ட 3 விரிவாக்க பணிகளையும் கைவிடுமாறு கோரிக்கை வைக்கிறேன்" என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Annamalai ask abandon coal mine in Delta district