விஜய்யின் அரசியல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் - நடிகர் அருண் விஜய்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம், என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டை தொடர்ந்து வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. 

அதற்கேற்ப, அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

"விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிகரமான பயணமாக அமைய என்னுடைய வாழ்த்துகள். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவருக்கு அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor arun vijay speech about actor vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->