பயணிகள் ரெயில் மீது டிராக் மோதி விபத்து - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் ரெயிலின் பெட்டி ஒன்று டிரக் மீது மோதியதால் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் மதுப்பூர்-ஜசிதி பிரிவில் ரோஹினி நவாடி ரயில்வே கிராசிங்கில் இன்று பிற்பகல் 2 மணியளவில் பயணிகள் ரெயிலின் பெட்டி ஒன்று டிரக் மீது மோதியதால் தடம் புரண்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்பு சம்பவம் குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:- 

"கேட்ஸ்மேன் ஒரு லெவல் கிராசிங்கின் தடையை குறைத்துக்கொண்டிருந்தபோது, டிரக் அதைக் கடந்து ரெயிலில் மோதியது. முதல் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டன. இருப்பினும், உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.

கிரேன் உதவியுடன் ரெயில் பெட்டியை தூக்குவதற்கு ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இந்த பாதை சரி செய்யப்பட்டு, இயல்பு நிலை திரும்பும்" என்றுத் தெரிவித்தார். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passanger train derailed in jarkhant for truck accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->