முஸ்லீம் குறித்து பாஜகவின் விளம்பர வீடியோ - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.!
election commision order bjp party remove advertisement vedio
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தேர்தலை ஒட்டி பாஜக வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விளம்பர வீடியோவில் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சி காலத்தில் இந்து குடும்பத்தின் வீட்டிற்குள் கும்பலாக நுழையும் முஸ்லிம் மக்கள் அந்த வீட்டை ஆக்கிரமிப்பு செய்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜகவின் இந்த விளம்பர காணொளிக்கு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், பாஜகவின் இந்த விளம்பர வீடியோ தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் படி, தேர்தல் விதிமுறைகளை மீறி முஸ்லிம் மக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பாஜக வெளியிட்ட தேர்தல் பரப்புரை விளம்பரத்தை நீக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
election commision order bjp party remove advertisement vedio