தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. "மெட்டு தவறாக இருந்ததால் நிறுத்தம்".. அண்ணாமலையின் புது விளக்கம்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாஜக தலைவர் ஈஸ்வரப்பா அவமதித்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் நேற்று தமிழர்களிடையே பாஜக வாக்கு சேகரித்தபோது தமிழ்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது.

அப்போது கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்க்கை பாதியில் நிறுத்தினார். அதன் பிறகு கன்னட நாட்டு கீதத்தை ஈஸ்வரப்பா ஒலிக்க வைத்தார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதைப் பற்றி எதுவும் கூறாமல் வாயை மூடி அமைதியாக இருந்தது தமிழக முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று கர்நாடகா தேர்தல் பரப்புரையின் பொழுது தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அண்ணாமலை "பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா அவர்கள் தமிழ் சமுதாய மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தேர்தல் பரப்புரைக்காக அமர்ந்திருந்தார். அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது இது கர்நாடக மாநிலம் என்பதால் கர்நாடக மாநிலத்தின் பாடல் போட வேண்டும் என கூறிய பொழுது அங்கிருந்து ஆப்ரேட்டர் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து போட்டார்.

அந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கூட சரியான பாடல் இல்லை. அதனுடைய மெட்டு 30 வினாடிகளுக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதாக இருந்தது. கர்நாடக மாநிலத்தின் பாடல் தான் முதலில் போட்டிருக்க வேண்டும்.  தமிழ்நாட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால் தமிழ் தாய் வாழ்த்து தான் முதலில் போட வேண்டும். அதுதான் நியதி, அதைத்தான் ஈஸ்வரப்பா செய்துள்ளார். அதில் எந்த தவறும் இல்லை" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்  அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai explained Tamil Thai greetings were wrong


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->