3 கோடி வருமானம்! 9 கோடிக்கு சொத்து! ஐஏஎஸ் அதிகாரியை சுத்துப்போட்ட அமலாக்கத்துறை! 2000 பக்க குற்றப்பத்திரிகை! - Seithipunal
Seithipunal


அமலாக்கத் துறை (ED) விசாரணையில் உள்ள பிகாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஹன்ஸ்க்கு எதிராக 2000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

பாட்னா அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், சஞ்சீவ், அவரது மனைவி மோனா, குடும்பத்தினர் மற்றும் பல ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.  

கடந்த அக்டோபரில், அவருக்கு சம்மந்தமான டெல்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனைகள் நடத்தியபோது முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி பல கோடி ரூபாய் மதிப்பிலான பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.  

சஞ்சீவ் நண்பர் சுபாஷ் யாதவின் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதன் மூலம், கமிஷன் என்ற பெயரில் சஞ்சீவ் குடும்பத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.  

சோதனையின் போது, இவர்களுக்கு ரூ.9.6 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அவர்கள் அளித்த வருமானத் தகவல் வெறும் ரூ.3.5 கோடி மட்டுமே என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar IAS ED Case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->