மனைவி மீது சந்தேகம்.. பொங்கலுக்கு அழைத்து சென்று.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள சூலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயது செங்கையா என்பவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் உமா மகேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

அந்த கணவருக்கு தனது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், எனவே அதிர்ச்சி அடைந்த உமா மகேஸ்வரி சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் பெற்றோர் சமாதானம் செய்து மீண்டும் உமா மகேஸ்வரியை செங்கையாவுடன் அனுப்பி வைத்தனர். பொங்கல் பண்டிகைக்காக தனது ஊருக்கு உமா மகேஸ்வரியை அழைத்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அவரது சந்தேக பேச்சை தாங்க முடியாத உமா மகேஸ்வரி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆத்திரமடைந்த செங்கையா இரும்பு கம்பியை எடுத்து மனைவியை தாக்கியுள்ளார். இதில், உமா மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உமா மகேஸ்வரியின் சகோதரன் வெங்கடேசுக்கு செல்போன் மூலம் தகவலை கூறிவிட்டு அவரை சென்று போனில் சரணடைந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anthra husband killed wife In pongal Day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->