மனைவி கண்முன்னே கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.! கதறிய புதுப்பெண்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் திருவ பத்தலாபுரம் பகுதியில் தாமோதரன் என்ற 24 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனுராதா என்ற 20 வயது பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் ஆனது. 

7 மாதங்களுக்கு முன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் கார்த்திகை மாத சோம வார்த்தை முன்னிட்டு மணமகள் வீட்டுக்கு தம்பதிகள் இருவரும் சென்றனர். அதன் பின் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் இருவரும் மீண்டும் தங்களது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். 

அப்பொழுது அவர்களை இடுக்க நல்லூர் என்ற பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து நின்றது. உதவிக்கு அக்கம் பக்கத்தில் யாரையாவது கூப்பிடலாம் என்று பார்த்தால் அங்கு ஆள் நடமாட்டமே இல்லை. 

இதனைத் தொடர்ந்து, பைக்கில் இருந்த தாமோதரனை கீழே தள்ளி கத்தியால் குத்தி கொலை செய்த அந்த கும்பல் மனைவி அனுராதா போட்டிருந்த நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

இதில் தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கணவரை இழந்த அனுராதா கதறி அழுத சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anthra men murdered by 3 thief


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->