நடித்து வீட்டிற்கு அழைத்த பெண்... நம்பி உடன் சென்ற பெண்ணுக்கு மதுக்கொடுத்து அரங்கேறிய கொடூரம்.!  - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணான நாகசாயி துணிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு நிறைய பெண் வாடிக்கையாளர்கள் இருந்த நிலையில், அவர்களிடம் நட்பாக பேசி குடும்ப பின்னணியை தெரிந்து கொள்வது நாகசாயின் வழக்கமாம். 

கடந்த சில வாரங்களுக்கு முன் 20 வயது பெண் கடைக்கு துணி எடுக்க வந்தபோது அவருக்கு பண பிரச்சனை இருப்பதை நாகசாயி தெரிந்து கொண்டார். தான் அவருக்கு உதவுவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த பெண்ணும் நம்பி சென்ற போது அவருக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து குடிக்க வைத்துள்ளார். 

பின், அந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து தனது நெருங்கிய நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்துள்ளார். சில இளைஞர்களுடன் இன்ஸ்டாகிராமில் அவரை ஆபாசமாக சாட் செய்ய வைத்துள்ளார்.

ஒரு இளைஞர் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட லாட்ஜில் அறை எடுத்து கொடுத்து உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். 

அதையும் மறைந்திருந்து வீடியோ எடுத்த நாகசாயி மற்றும் அவருடைய ஆண் நண்பர் அந்த இளைஞரிடம் இரண்டு லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதில், பயந்து போன அந்த இளைஞர் 1.9 லட்சம் பணமும் கொடுத்துள்ளார். 

மேலும் பணம் வேண்டும் என மிரட்டிய நிலையில் உடனே அந்த வாலிபர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் அனைத்து உண்மைகளும் வெளிவந்துள்ளன. இதை அடுத்து நாகசாயி மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anthra women cheat women for money


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->